Tuesday 10 November 2015

இந்த கண்ணனின் கீதை

இந்த கண்ணனின் கீதை 
------------------------------------
கடமையை செய்யுங்கள் 
பலனை எதிர் பாராமல் – அனால் 
பலன் பக்கத்தில் நின்று 
பராக்கு மட்டும் பார்த்தவனுக்கு
போகும் என்றால்
எதிரிக்கு காட்டும் எதிர்ப்பை விட – அதிகம்
எதிர்ப்பை காட்டுங்கள்

காதல் கடற்கரை

காதல் ஏன் கடற்கரைகளில்
செழிக்கிறது தெரியுமா ?
அலை பேசும் மொழி
கரைக்கு கேக்காது
அவள் பேசுவது அவனுக்கும்
அவன் பேசுவது அவளுக்கும்
காதலுக்கு கண் மட்டும் அல்ல
காதும் கேக்காது

ஆதலால் காதல் செய்வீர்
கடற்கரிகளில் 

அந்த தீபாவளிக்கு காத்திருக்கிறேன்

அந்த தீபாவளிக்கு காத்திருக்கிறேன் 
--------------------------------------------------
நரகாசுரனுக்கு நன்றி 
இந்தியா இன்று மட்டுமாவது 
ஒளிமயமாக மிளர 
உதவியதற்கு
நரகாசுரனே நல்லவனோ – என்று
நினைக்கும் அளவுக்கு
அத்தனை அசுரர்கள்
மிச்சம் இங்கே
தீவட்டி தடியர்கள் – அவர்களை
தீர்த்து கட்டும் – அந்த
தீபாவளிக்கு தீராத
ஆசையோடு காத்திருக்கிறேன்

உயிரியளவுகள் (BIOMETRIC DATA )

உயிரியளவுகள் (BIOMETRIC DATA )
-------------------------------------------------------------------
நாட்டுபுறத்து நண்பன் ஒருவனின்
நக்கல் சிரிப்பு ஒன்று கேட்கிறது 
கைநாட்டு அவன் என்று 
கைகொட்டி சிரித்தவர்களை பார்த்து
நிலாவில் கால் பதித்த விஞ்யானம்
நிலத்தில் மனிதர்களை
நிலுவை செய்கிறது
கடவுசீட்டுக்கும்
கை நாட்டு
குடும்ப அட்டைக்கும்
கைநாட்டு
அடையாள அட்டைக்கும்
அதே கைநாட்டு
கற்று சிரித்தவர்களை கண்டு
சிரிக்கிறான் நாட்டு புறத்து நண்பன் – அவன்
கற்றது கை மண் அளவு கூட இல்லை
மனது மண்ணின் எல்லை கடந்து

முற்றிய முரண்பாடு

முற்றிய முரண்பாடு 
---------------------------------------
அணுகுண்டும் ஆயுதமும் தந்த 
அறிவியல் சொல்கிறது 
முப்பது தலைமுறை 
முதிர்ந்த நம்பிக்கை
மூட நம்பிக்கை என்று
கடவுள் நம்பிக்கை அல்ல
கருணை நம்பிக்கை அது
கடமை நம்பிக்கை
கற்க வேண்டிய நம்பிக்கை
கற்று காக்க வேண்டிய நம்பிக்கை

ஒரு நிழல் நிஜமாகிறது

நிழல் நிஜமாகிறது 
----------------------------------------
வெயிலில் வெந்து விரையும் 
வெற்று பாதங்கள் 
நிழல்கள் ஆனது 
நிஜமான செருப்புகள்

ஒரு நதியே கண்ணீரானது

ஒரு நதியே கண்ணீரானது 
----------------------------------------
படுத்துறங்கும் நதிகளின் ஓலம் 
மணல் லாரிகளின் 
மடியிலிருந்து கசியும் ஈரம் 
கண்ணீர் நதியானது
நதியே கண்ணீரானது
பாறைகளில் ஈரம் மிச்சம்
நதி படுகைளில்
வெறும் மனித எச்சம்